கலிபோர்னியா:-பிரபலமான ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட ஐபோன் மாடலான ஐபோன் -6-ஐ அடுத்த மாதம் 9ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது. 2007ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மேக் கம்ப்யூட்டரை இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் அறிமுகப்படுத்தியிருந்தார். இதேபோல இப்போது ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
புதிதாக அறிமுகமாகும் ஐ-போன் 6, இரண்டு மாடல்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. முதலாவது மாடல் 4.7 அங்குல திரை கொண்டதாகவும், அடுத்தது 5.5 அங்குல திரை கொண்டதாகவும் வெளிவரும் என தெரிகிறது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக ஆப்பிள் ஐபோன் வெளி வர உள்ளது.ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சையும் அப்போது அறிமுகப்ப டுத்தக்கூடும் என தெரிகிறது. இதற்கு ஐ-வாட்ச் என்ற பெயரில் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி