செய்திகள்,திரையுலகம் சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!… post thumbnail image
சென்னை:-சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் விஷால் ஜோடி போடுகிறார்.அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், இதில் சிம்ரன் மட்டும் உடன்படவில்லை. ஏற்கனவே நானி நடித்த ஆஹா கல்யாணம் படத்தில் சிறிய ரோலில் நடித்து அது ஒர்க் அவுட்டாகாமல் போனதால், தொடர்ந்து துக்கடா வேடங்களில் நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கழன்று கொண்டாராம்.

அதனால், சிம்ரன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்த சுந்தர்.சி இப்போது சேர்ந்து போலாமா படத்தில் நாயகியாக நடித்த மதுரிமாவை புக் பண்ணியுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி