இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேரி வெல்ஸ் என்ற இளைஞர், மெக் டொனால்டு என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 9 வருடங்கள். ஆனால் காதலர்கள் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் இருவரும் பிரிந்து விட்டனர்.
மனம் உடைந்து போன காதலர் கேரி, அங்கு போர்ட் வில்லியம் என்ற இடத்தில் ஓடும் ரெயில் முன் பாய்ந்து உயிரைத் துறந்தார். அந்த ரெயிலை ஓட்டி வந்தவர் அவரது காதலி மெக் டொனால்டு. ஆனால் இது ரெயில் முன் பாய்ந்து உயிரை விட்ட கேரிக்கு தெரியுமா, தெரியாதா என்பது யாருக்கும் தெரியாது.ஆனால் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்திருப்பதாக மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி