இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அஜீத் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். ஒவ்வொரு அறையாக சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை போட்டனர்.இறுதியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் அஜீத் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டது. அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்களை பிடித்து விசாரிக்கப்பட்டனர்.
108 நம்பருக்கு பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் எந்த போன் நம்பரில் இருந்து தொடர்பு கொண்டான் என்று போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நம்பரை கண்டுபிடித்து விட்டதாகவும் மிரட்டல் விடுத்தவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி