சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சினிமாவில் கலக்கி வருவது போல், அரசியலிலும் இறங்கி கலக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். அதற்காக ஒவ்வொரு முறையும் ரஜினி ரசிகர்கள் அவருக்கு நெருக்கடி கொடுப்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி விரைவில் தனிக்கட்சி துவங்கவுள்ளதாகவும், அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதே சமயம் பா.ஜ.க வில் சேர வேண்டாம் என்று ரஜினியுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி