சென்னை:-லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதைய ரஜினி படங்கள் எல்லாமே பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருவதால், இந்த படத்திலும் கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையாளராக பணியாற்றவிருக்கிறாராம். எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி படங்களை தயாரித்த தனுஷ், தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பில் அந்த படத்தை தயாரிக்கலாம் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி