சென்னை:-சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு பிடித்த உணவு பற்றி குறிப்பிட்டிருந்தார். மீன், இறா போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு ருசி பார்ப்பவர் ஸ்ருதி. இதற்காக ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அவற்றை ஸ்பெஷலாக சமைக்கும் உணவகங்களை தேடிப்பிடித்து சாப்பிடுவது வழக்கம். ஸ்ருதியின் இந்த அசைவ பழக்கத்தை கமல் மாற்றி இருக்கிறார். சைவ உணவுக்கு மாறும்படி அவர் அட்வைஸ் செய்தார். அதை ஸ்ருதி ஏற்றுக்கொண்டார்.
இதுபற்றி ஸ்ருதி தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது, என் அப்பாவின் அறிவுரையை ஏற்று நான் வெஜ்டேரியனாக மாறிவிட்டேன். அது நன்மைக்கே. ஆனால் பட்டர் இறா, மீன் வகைகளை இனிமேல் கனவில் ருசிப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி