சென்னை:-தன்னுடைய அடுத்தப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைக்க இருக்கிறார் மணிரத்னம்.
இந்தப்படத்தை ஹிந்தியிலும் நேரடிப்படமாக வெளியிட இருக்கிறார். அதனால்தான், கதாநாயகியாக அலியாபட் என்ற பாலிவுட் நடிகையை தேர்வு செய்து இருக்கிறாராம். மௌனராகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராமையே தற்போது எடுக்க உள்ள படத்துக்கும் ஒளிப்பதிவாளராக கமிட் பண்ணி உள்ளார் மணிரத்னம்.
மௌனராகம் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட அம்சம். இளையராஜாவின் இசை. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இருந்தால்தான் மௌனராகம் படத்தை பெரிய அளவில் பிசனஸ் பண்ண முடியம் என்பதால் இளையராஜா தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி