சென்னை:-இயக்குனர் களஞ்சியம் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட களஞ்சியம் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறது.
கருத்துவேறுபாடு காரணமாக களஞ்சியம் இயக்கிய ஊர்சுற்றி புராணம் படத்தில் இருந்து திடீரென நடிகை அஞ்சலி விலகினார். படம் பாதியில் நிற்பதால் அதனை முடித்துக்கொடுக்கும் படி கேட்டபோது அதற்கு அஞ்சலி மறுத்துவிட்டார். இந்நிலையில் களஞ்சியம் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், அவரிடம் பணம் வாங்கிய அஞ்சலி திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று களஞ்சியத்தின் நண்பர்கள் அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அஞ்சலி பணம் கொடக்க மறுத்துவிட்டாராம். இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி