சென்னை:-மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு எதிராக சதீஷ்பால் என்பவர், என்னுடைய ஒரு மழைக் காலத்து நாவலிலிருந்துதான் த்ரிஷ்யம் படத்தின் கதை எடுக்கப்பட்டது. எனவே த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில், சதீஷ்பாலின் வாதத்தை ஏற்று, த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக்கூடாது அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. திருநெல்வேலியில் கமல், கௌதமி பங்குபெறும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து விசாரித்தபோது, நீதிமன்றத்தில் கட்ட வேண்டிய அபாரதத் தொகை 10 லட்ச ரூபாயை செலுத்திவிட்டுத்தான் படப்பிடிப்பைத் துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் பாபநாசம் படக்குழுவினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி