சென்னை:-சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷார்மி பெங்களூரில் இருந்து விசாகபட்டினத்திற்கு விமானத்தில் சென்றுள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டு 100 அடி கீழே இறங்கியதாம். பல மைல் தூரம் தாழ்வாக பறந்த விமானம் பின்னர் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு தனது பாதைக்கு திரும்பி பத்திரமாக வந்து இறங்கியது. இதுபற்றி ஷார்பி தன் பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
இப்போது நான் உயிரோடு இருப்பதையே என்னால் நம்ப முடியவில்லை. திடீரென விமானம் கிழே இறங்கும்போது டீ கப், லக்கேஜ் எல்லாமே மேல் நோக்கி பறந்தது. விமான பணிப்பெண்கள் சிறிய கோளாறுதான் சரியாகிவிடும் இறைவனை பிரார்த்தியுங்கள் என்று சொன்னார்கள். நான் இருக்கிற எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டேன். அவர்கள் கருணையால் நான் இன்று மண்ணில் இருக்கிறேன். வாழ்க்கை கொஞ்ச காலம்தான் மரணம் எப்போதும் வரலாம் அதுவரை பிறருக்காக வாழலாம். நல்லபடி வாழலாம் என்ற கருத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியிருக்கிறது என்கிறார் ஷார்மி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி