இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் மாகாணத் தலைநகர்களில் இருந்து பீஜிங்கை அடைய எட்டு மணி நேரமே ஆகும் என்று சீன பொறியியல் அகாடமியின் ரயில்வே நிபுணரான வங் மெங்க்ஷு குறிப்பிட்டுள்ளார்.அதுபோல் வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தின் டலியன் நகரிலிருந்து ஷன்டோங் மாகாணத்தில் உள்ள யண்டாய் நகருக்கான பயண காலம் வெறும் 40 நிமிடமாக மாறும் என்றும் இது தற்போதைய பயண நேரமான 6 மணி நேரத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரெயில்வே துறையின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் நகரமயமாக்க போன்றவற்றை நிலைப்படுத்தும் என்று கூறி சீனப் பிரதமர் லி கிகியாங் தனியார் முதலீடுகளை இத்துறையில் அதிகரிக்க முயற்சி எடுத்ததைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.இருப்பினும் மற்ற போக்குவரத்து வழிமுறைகள் மீதான அனுகூலம் குறித்தும் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி