சென்னை:-பல படங்களில் பஞ்ச் டயலாக் பேசி நடித்து வந்த ரஜினி பின்னர், அதை குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது இரண்டு வேடங்களில் தான் நடித்து வரும் லிங்காவிலும் பஞ்ச் டயலாக் பேசியுள்ளாராம். ஆனால் அது மற்ற படங்களைப்போன்று ரிப்பீட்டு செய்யப்படவில்லையாம். ஒரே தடவை சொன்னாலும் ரசிகர்களின் மனதில் பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இப்படத்தில் பொதுமக்களுக்காக ஒரு அணை கட்டுவாராம் ரஜினி. ஆனால், அதற்கு ரஜினியுடன் கைகோர்க்கும்போது உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பிரச்னைகள் வருமாம். அதைக்கண்டு கோபமாகும் ரஜினி, எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க அது போதும் என்பாராம். இந்த டயலாக் ஒரே இடத்தில் மட்டுமே ரஜினி பேசினாலும், கதையில் அவர் சொல்லும் இடம் முக்கியமானது என்பதால், இதற்கு ஆடியன்ஸ் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைக்கும் என்கிறது லிங்கா படக்குழு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி