அதைத் தொடர்ந்து, ‘கத்தி’ படம் பற்றிய முக்கிய அறிவிப்பும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கத்தி என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர்களும் வெளிவரும் என தகவல்கள் வெளியாகின.அதன்படி ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. ஆனால் எதிர்பார்த்தபடி ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய போஸ்டர்கள் வெளிவரவில்லை. மாறாக, அதே ‘லைகா புரொடெக்ஷன்ஸ்’ லோகோவுடனே வெளிவந்துள்ளது.
இதன் மூலம் கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விற்கவில்லை என்பதையும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லைகா அதை சமாளிக்கும் என்பதையும் மறைமுகமாக உணர்த்துவதுபோல் புதிய போஸ்டர்கள் உள்ளன.இதற்கிடையில், வெளியான கத்தி போஸ்டர்களைப் பார்த்த விஜய் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிய ஸ்டில்லுடன் புது மாதிரியான டிசைனில் போஸ்டர்கள் வரும் எனவும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஏற்கெனவே வெளிவந்த பழைய ஸ்டில்லுடன் போஸ்டர்கள் வந்ததே ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு காரணம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி