சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கான அறிவிப்பு வெளியானது முதல், அப்படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்காவும், திரிஷாவும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தல 55 என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த தலைப்பு இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தல 55 படத்தின் தலைப்பு ஆயிரம் தோட்டாக்கள் என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் புதிய படத்தின் தலைப்பு பற்றிய பல வதந்திகள் பரவி வரும் நிலையில், அந்த தலைப்பை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி