சென்னை:-ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இதனை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஹாலிவுட் டைப்பிலான திகில் கதை. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்களை மிஷ்கின் இதுவரை வெளியிடவில்லை. முதன் முறையாக ஹீரோயின் பற்றிய தகவல் கசிந்திருக்கிறது.
பிசாசில் ஹீரோயினாக நடிப்பவர் கொச்சியை சேர்ந்த பிரயகா. மலையாளத்தில் வெளிவந்த ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தை பார்த்த மிஷ்கின் அவரையே ஹீரோயினாக்கி விட்டார். கொச்சி அன்னை தெரசா கல்லூரியில் படித்து வரும் பிரயகா கலாமண்டலத்தில் நடனமும் கற்று வருகிறார். நிறைய மாடலிங் ஷோக்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். முதன் முறையாக மிஷ்கின் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி