அதன் பின் மணிரத்னம், சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜாவுக்கு ஒரு கதை தயார் செய்து அதை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த கதையும் பிடிக்கவில்லை என ராம் சரண் பதிலளித்தாராம்.அதற்குப் பதிலாக தெலுங்குத் திரையுலகின் கமர்ஷியல் இயக்குனர்களான கிருஷ்ண வம்சி, ‘பொம்மரிலு’ பாஸ்கர் படங்களில் நடிக்க சம்மதித்திருக்கிறார். மணிரத்னம் படத்தில் நடித்தால் நீண்ட நாட்களுக்குப் படப்பிடிப்பு நடக்கும், அது மட்டுமல்ல அவருடைய திரைக்கதை மிகவும் மெதுவாக இருக்கும் என ராம் சரண் கருதியதாலேயே அந்த வாய்ப்பை வேண்டாமென்று சொன்னதாகத் தெரிகிறது.
சமீப காலமாக மணிரத்னம் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார். மணிரத்னம் படத்தை இவர் வேண்டாமென்று சொன்னதுதான் தெலுங்குத் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி