சென்னை:-நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு கொண்ட விஜய், அவர்களை அடிக்கடி சந்தித்து வருவார். பல ஊர்களில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளிலும் கலந்து கொள்வார்.
இந்நிலையில், கோவையில், விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், ரசிகர்கள் பலரது திருமணம் இன்று ஒரே இடத்தில் நடந்தது. இளைஞர் அணி நடத்திய இந்த திருமண நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டார். மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி