சென்னை:-பல மொழிகளிலும் நடித்து வந்த நடிகை பியா, தனக்கு வேண்டிய டைரக்டர்கள், சிலரது இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வந்தார்.அதற்கு, பலர் செவி சாய்க்காத போதும், பிரபல மலையாள டைரக்டரான பிரியதர்ஷன், மலையாளத்தில் தான் இயக்கும், ‘ஆமையும் முயலும்’ என்ற படத்தில், பியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல் கொடுத்துள்ளார்.
இதனால், சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் பியா, நான் நடிக்க விரும்பிய முக்கிய டைரக்டர்களில் மிக முக்கியமானவர் ப்ரியதர்ஷன். இப்போது, அவரே எனக்கு சான்ஸ் கொடுத்திருப்பது, திரையுலகில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது போல் உணர்கிறேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி