ஆனால், தமிழ் சினிமாவினர் அதை கண்டுகொள்ளாத நிலையில், தெலுங்கில் அனாமிகா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ள மறுத்ததால், அவருக்கு ரெட் கார்டு போட்டு, தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை போட்டுள்ளனர்.ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியெல்லாம் எந்த கண்டிசனும் போட்டு விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையினால் அதே கண்டிசனை இப்போதும் அவர் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில், கைவசம் 3 படங்களை அவர் வைத்திருந்தபோதும், அடுத்தபடியாக அவர் குறிவைத்த சில மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் அஞ்சானில் அதிரடி நடிகையாக உருவெடுத்த சமந்தா பக்கம் திரும்பி நிற்கிறதாம்.
இதுவரை எந்த நடிகைக்கும் அஞ்சாத நயன்தாரா, முதன்முறையாக சமந்தாவுக்கு பயந்து போய் இருக்கிறார். அதனால் அவரது தாக்குதலில் இருந்து தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, முன்னணி ஹீரோக்களின் குடும்ப விழாக்கள் மற்றும் அவர்களின் பர்சனல் நிகழ்ச்சிகளில் தானே முன்வந்து கலந்து கொள்ளும் நயன்தாரா, அவர்கள் மற்ற ஹீரோயினிகளுடன் நடித்த படங்களாக இருந்தாலும் அவற்றை பார்த்து விட்டு, அவர்களின் பர்பாமென்ஸ் குறித்து நீண்ட புகழ்மடல் வாசிக்கிறாராம்.நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம், அவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஹீரோக்களுக்கு அவர் மீது திடீர் பாசத்தை உருவாக்கியுள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி