சென்னை:-தெலுங்கில், ‘ஆகடு’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு. இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட தமன்னா, அடுத்தபடியாக மேலும் சில ஹீரோக்களும் ஆதரவுகரம் நீட்டியதை அடுத்து, அதிக நம்பிக்கையில் இருக்கிறார்.
மேலும், டைரக்டர்களின் நடிகை என்ற வட்டத்தில் இருந்து வெளியே வந்து, இப்போது நான் ஹீரோக்களின் நாயகியாகி விட்டேன் என, வெளிப்படையாக கூறி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி