சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய தணிக்கை குழு வாரிய தலைவர் ராகேஷ்குமார் சமீபத்தில் சி.பி.ஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகளிடம் ராகேஷ்குமார் வாங்கிய லஞ்சத்தின் விபரங்களை அளித்தனர். அதில் தமிழ் படமான அஞ்சானும், அதன் தெலுங்கு பதிப்பான சிக்கந்ததரும் இடம் பெற்றிருந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோர்ட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: தமிழ் நாட்டில் தற்போது அஞ்சான் என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து ஒரு லேப்டாப், மற்றும் ஐபேட் ஒன்றினை பரிசாக பெற்றுள்ளார். அஞ்சான் படம் ஜூலை மாதம் 24ம் தேதி ராகேஷ் குமார் பார்வைக்கு அனுப்பப்பட்டது அவர் 6 நாட்கள் தன் கையில் படத்தை வைத்துக் கொண்டு அதன் பிறகே பார்த்துள்ளார். அதன் பிறகு ஆகஸ்ட் 6ம் தேதி சான்றிதழ் வழங்கி உள்ளார். அதேபோன்று ஆகஸ்ட் 9ந் தேதி சிக்கந்தர் என்ற தெலுங்கு படத்திற்கு சான்றிதழ் வழங்க 50 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்ததாக சி.பி.ஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி