14 ஆண்டுகளாக சிறை காவலில் இருந்த ஷர்மிளாவை சமீபத்தில் கோர்ட் விடுதலை செய்து உத்தவிட்டது. அவர் வீட்டுக்கு செல்லவில்லை. தாயாரையும், சகோதரரையும் சந்திக்கவில்லை.ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலை மோசமான நிலையில் இன்று காலை ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு சென்று அவரை கைது செய்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
அப்போது அவரது தாயாரும், உண்ணாவிரத பந்தலில் இருந்தார். அவர் ஷர்மிளாவை போலீசார் கைது செய்யவிடாமல் தடுத்தார். என்றாலும் பெண் போலீசார் ஷர்மிளாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றி போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.ஏற்கனவே அவர் விடுதலை செய்யப்பட்டபோது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவரது உடல்நிலைக்கு அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.ஆனால் ஷர்மிளா மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி