ஒடிசா:-ஒடிசா மாநிலம் குஹாலிபால் கிராமத்தை சேர்ந்தவர் மகாலியா நாயக்(வயது 56). அவரது மனைவி ஜானா. மாலியா நாயக் கடந்த திங்கட்கிழமை காலை தனது மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார். அப்போது வீட்டு வேலையில் இருந்த ஜானா சிறிது காலதாமதமாக தேநீர் எடுத்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாலியா நாயக், ஜானாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சண்டை முற்றிப்போக இனிமேல் உனக்கு சமைக்கவும் மாட்டேன், உணவு பரிமாறவும் மாட்டேன் என்று ஜானா கோபத்துடன் கூறியுள்ளார். அப்போது சண்டை ஓய்ந்துள்ளது. மாலையும் இப்பிரச்சனையை எழுப்பி மகாலியா, ஜானாவுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மாலியா நாயக் கூர்மையான ஆயுதத்தை கொண்டு ஜானாவை குத்தி கொலை செய்துள்ளார். போலீசார் சந்தேகத்தின் பேரில் மாகாலியா நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தியபோதே இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி