இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள்.இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, கலில் அல் ரகுமான் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி, அப்துல் ராவுப் ஹக்கானி ஆகிய 4 பேரின் தலைகளுக்கு தலை 5 மில்லியன் டாலர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் தலைவனான சிராஜூதீன் ஹக்கானியின் தலைக்கு அறிவித்த 5 மில்லியன் டாலர் விலையை 10 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.இவர்களை உயிருடன் பிடிப்பதற்கு அவர்களது இருப்பிடம் பற்றிய தகவல்களை தந்து, அவர்களை பிடிக்க உதவுகிறவர்களுக்கு அமெரிக்கா இந்த பரிசினை வழங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி