செய்திகள்,திரையுலகம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் திரைப்படம்…

தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் திரைப்படம்…

தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் திரைப்படம்… post thumbnail image
2014ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சைவம்’. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் விஜய் ‘தெய்வத்திருமகள்’ போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருந்திருந்தார். சைவம் முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாக உருவாகியது.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் சாராவும், நாசரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அத்துடன் நாசரின் இளைய மகன் பாஷாவும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நிறைய புதுமுகங்களும் நடித்திருந்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். நீரவ்ஷா ஒளிப்பதிவை செய்திருந்தார்.

ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் நிறைய பாராட்டுகளை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவுள்ளது. தெலுங்கில் இப்படத்தை கிரிஷ் இயக்கி வருகிறார். இப்படத்தை இந்தியில் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இயக்குனர் கிரிஷ் இதற்கு முன் ‘வானம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி