செய்திகள்,முதன்மை செய்திகள் 36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு…

36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு…

36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு… post thumbnail image
நாக்பூர் :- காந்தாபாய் குன்வந்த் என்ற அந்த பெண்மணி கடந்த வாரம் தனது அடிவயிற்றில் தீராத வலி ஏற்பட்டதன் காரணமாக நாக்பூரில் உள்ள என்.கே.பி. சால்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது அடிவயிற்றின் கீழ் கட்டி இருந்ததை கண்டுபிடித்தனர். அது புற்றுநோயாக இருக்கும் என மருத்துவர்கள் கருதினர். ஆனால் அப்பெண்ணை எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு உட்படுத்திய போது அது பிறக்காத குழந்தையின் எலும்புக்கூடு என்ற உண்மையை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

எனவே அறுவை சிகிச்சை மூலம் அந்த எலும்புக்கூட்டை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதே போன்ற சம்பவம் எங்காவது நிகழ்ந்ததா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து வந்தனர். அப்போது பெல்ஜியத்தை சேர்ந்த பெண்ணொருவர் உடலிலிருந்து 18 வருடங்கள் கழித்து இதே மாதிரி எலும்புக்கூடு அகற்றப்பட்டதை கண்டனர். கடந்த 1978 ஆம் ஆண்டு தனது 24வது வயதில் அப்பெண் கர்ப்பமுற்ற போது கருப்பைக்கு வெளியே குழந்தை வளருவதை மருத்துவர்கள் கண்டனர். எனினும் அவரது கர்ப்பம் இடைப்பட்ட காலத்திலேயே கலைந்து போனது குறிப்பிடத்தக்கது. அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் செய்த சிகிச்சையை பின்பற்றி தற்போது காந்தாபாய்க்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி