ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி’. படம் தீபாவளி ரிலீஸ் என முடிவு செய்துள்ளதால், படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்பதே இப்போதைய ரசிகர்களின் கேள்வி.
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துவரும் ‘கத்தி ‘ படத்தின் பாடல்கள் முடிந்து விட்டது என அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ”விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. ரசிகர்களை கண்டிப்பாக ‘கத்தி படத்தின் பாடல்கள் ரசிக்க வைக்கும் ” எனவும் கூறியுள்ளார் .
படத்தின் பாடல்கள் செப்டம்பரில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் மேலும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி