செய்திகள்,முதன்மை செய்திகள் எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…

எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை…

எபோலா நோயால் பலியான 7 மாத குழந்தை… post thumbnail image
அபுஜா :- நைஜீரியா நாட்டில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் என்ற லைபேரியா ஆசாமி மூலம் எபோலா நோய் பரவியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் 25-ம் தேதியும் அடுத்தடுத்து பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, நைஜீரிய மக்களுக்கும் எபோலா கிருமித்தொற்று பரவத் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு மரணத்தை தவிர மருந்து இல்லை என்று கூறப்படும் நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், எபோலா நோயால் பாதிக்கப்பட்டு, நைஜீரியாவின் க்வாரா மாநில தலைநகரான ஈயோரின் பகுதியில் உள்ள சோபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணின் 7 மாத ஆண் குழந்தை பரிதாபமாக பலியானதாக அம்மாநில கவர்னர் அறிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி