விசாரணை அறிக்கை மும்பை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் ஷாலினி ஜோஷியிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி எம்.டி. கெய்க்வாட் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும் அவர் மீது இலாகா பூர்வ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. செசன்ஸ் கோர்ட்டு மூத்த நீதிபதி அல்லது ஐகோர்ட்டு நீதிபதி இந்த விசாரணையை நடத்துவார். விசாரணை நீதிபதியின் பெயரை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவிப்பார் என்று பதிவாளர் ஜெனரல் ஷாலினி ஜோஷி தெரிவித்தார்.
இலாகாபூர்வ விசாரணையின் போது நீதிபதி கெய்க்வாட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும். இந்த விசாரணைக்கான கால வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. விசாரணையின் போது நீதிபதி கெய்க்வாட்டோ அல்லது அவரது வக்கீலோ ஆஜராகி தங்கள் தரப்பை எடுத்துக் கூறலாம் என்றும் பதிவாளர் ஷாலினி ஜோஷி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி