இப்போது இந்த அணி அவரது குழந்தை. எல்லா விஷயங்களையும் அவர் தான் கையாள வேண்டும். எந்தவிதமான உதவியை அவர் கேட்டாலும் அதை செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்று எல்லா வகையான அம்சங்களையும் ஆராய்ந்தோம்.
ரவிசாஸ்திரியை அணுகிய போது, இப்பணியை செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் நான், இது சவாலான பணி என்றேன். அதற்கு அவர், ‘தெரியும். அதை என்னால் சிறப்பாக செய்ய முடியும்’ என்று கூறினார். பிளட்சரின் எதிர்காலம் குறித்து கேட்கிறீர்கள்.
அது பற்றி இப்போது விவாதிப்பது தேவையில்லாத ஒன்று. தற்போதைய சூழலுக்கு ஏற்ப, அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தேவையான நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். கேப்டன் டோனியை மாற்றும் எண்ணம் இல்லை.
அவருக்கு எங்களது முழு ஆதரவு உண்டு. தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. மற்ற முடிவுகளை எடுப்பது தேர்வாளர்களை பொறுத்தது.
இவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி