செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா…

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா…

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா… post thumbnail image
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 18ந் தேதி நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது ஒரு நாள் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக காக்கும், அம்லாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அம்லா 15 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய டூபிளஸ்சிசும் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருக்கும் காக்கும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் 38 ரன்கள் சேர்த்திருந்தபோது காக்கும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் வந்த வேகத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். இதனால் 5வது விக்கெட்டுக்கு டுமினி களமிறங்கினார். அவரும் டூபிளிசிசும் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். எனினும் 36 ரன்னில் டூமினி அவுட்டாக பொறுமையாக விளையாடிய டூளிபிசிஸ் 55 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய மில்லரும் தன் பங்குக்கு 45 ரன்னில் அவுட்டனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெற்றிக்கு 258 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. சென்ற போட்டியில் விளையாடியதை போலவே இந்த ஆட்டத்திலும் தனது சொதப்பல் ஆட்டத்தை வெளிப்பிடுத்தினர் ஜிம்பாப்வே வீரர்கள். அந்த அணியில் வில்லியம்ஸ் மட்டும் 55 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் யாரும் 25 ரன்களை கூட தாண்டவில்லை. இறுதியில் 49.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே. தென் ஆப்பிரிக்க அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 3 விகெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பார்னெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

South Africa Innings – 257

Batting Out Desc R B 4s 6s SR

Quinton de Kock (wk) c Chigumbura b John Nyumbu 38 38 5 0 100.0
Hashim Amla b John Nyumbu 15 21 2 0 71.4
Faf du Plessis c Chigumbura b P Utseya 55 72 3 0 76.4
AB de Villiers (c) run out (Mutumbami) 1 4 0 0 25.0
Jean-Paul Duminy b P Utseya 36 47 2 0 76.6
David Miller lbw b Vitori 45 48 2 2 93.8
Ryan McLaren c Chigumbura b Vitori 4 12 0 0 33.3
Wayne Parnell c Sean Williams b Neville Madziva 24 27 2 0 88.9
Kyle Abbott c S Raza b Sean Williams 23 26 2 0 88.5
Aaron Phangiso c John Nyumbu b Sean Williams 2 3 0 0 66.7
Imran Tahir not out 0 0 0 0 0.0

Extras 14 (b – 0 w – 7, nb – 0, lb – 7)

Total 257 (49.4 Overs, 10 Wickets)

Zimbabwe Innings – 196

Batting Out Desc R B 4s 6s SR

Hamilton Masakadza b Parnell 7 24 1 0 29.2
Richmond Mutumbami (wk) lbw b A Phangiso 12 20 0 1 60.0
Sikandar Raza b McLaren 0 14 0 0 0.0
Brendan Taylor c D Miller b Duminy 14 28 2 0 50.0
Sean Williams c Parnell b McLaren 55 84 3 2 65.5
Elton Chigumbura (c) c Duminy b Parnell 7 13 0 0 53.8
Luke Jongwe c Amla b McLaren 6 16 0 0 37.5
Prosper Utseya lbw b Parnell 15 34 2 0 44.1
Neville Madziva b Tahir 25 37 4 0 67.6
John Nyumbu c de Kock b Tahir 18 18 1 1 100.0
Brian Vitori not out 20 8 2 2 250.0

Extras 17 (b – 2 w – 6, nb – 1, lb – 8)

Total 196 (49.1 Overs, 10 Wickets)

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி