‘அஞ்சான்’ படம் ரிலீசான போது ரசிகர்கள், மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதுவே இவ்வளவு வசூல் ஈட்ட காரணம் என்கின்றனர்.இது குறித்து டைரக்டர் லிங்குசாமி கூறும்போது ‘அஞ்சான்’ படம் 3 நாளில் ரூ.30 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த படத்தில் சூர்யாவின் ‘கெட்டப்’, அஞ்சான் தலைப்பு டிரெய்லர், பாடல்கள், சூர்யாவுக்கும் எனக்குமான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. கதை கருவும், போஸ்டர்களும் படம் பார்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவே இவ்வளவு பெரிய வசூல் சாதனைக்கு காரணம் ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி