படத்தில் சமந்தா படு கிளாமராக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சுடிதாரில் வருகிறார். மற்ற காட்சிகளில் குட்டைப் பாவாடை, குட்டையான டிரவுசர் ஆகியவை மட்டுமே அணிந்து வருகிறார். இது குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நெளிய வைக்கும் அளவில் இருந்தாலும், இளம் ரசிகர்கள் திரையரங்குகளில் நிறையவே கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதிலும் ஒரு பாடல் காட்சியில் சமந்தா சில வினாடிகள் நீச்சல் உடையில் வரும் போது விசில் சத்தம் அதிகமாக ஒலிக்கிறதாம். அந்தக் குறிப்பிட்ட காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது. அது பற்றிய கமெண்ட்டுகளும் அதிகம் எழுந்து வருகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி