அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் சென்டர் ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளனர். தலையில் வழுக்கை விழுதல் ஒரு நோயாகும்.
மயிர் காம்புகள் அழிவதால் இந்த வழுக்கை உருவாகின்றன. எனவே இது குறித்து சுண்டெலிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மயிர்க்காம்புகளை அழிக்கும் ‘டி’செல்கள் கண்டறியப்பட்டன.அந்த செல்களை அழித்து புதிய தலைமுடிகள் வளர செய்யும் வகையில் மருந்து கண்டு பிடித்துள்ளனர்.
அதற்கு ‘ஜாக்’ என பெயரிட்டுள்ளனர். இந்த மருந்தை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால் போதும். அந்த இடத்தில் 5 மாதத்தில் மீண்டும் முடி வளருகிறது.சோதனை முறையில் இது பலருக்கு முழுமையாக பலன் அளித்துள்ளது என ஆராய்ச்சி குழுவின் தலைவர் ரபேல் கிளைனெஸ் மற்றும் ஏஞ்சலா கிறிஸ்டியானோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி