சென்னை:-தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பாபு கணேஷ். இவர் ‘கடல் புறா’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்துக்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக பாபுகணேசும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவியும் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி மரத்தின் மேல் மோதி விபத்துக்குள்னானது. இதில் காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பாபு கணேசும், கேமராமேனும் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி