வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த திரைப்படங்கள் தமிழ்க் கலாசாரம், இலங்கைப்போர் தொடர்பான தமிழர் உணர்வுகளை மோசமாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. கத்தி திரைப்படத்தை தயாரித்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச மறைமுகமாக நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தமிழர் உணர்வுகளை புண்படுத்துவதாக வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட தமிழ்ப்பெண்கள் அமைதியாக வாழ்வதாகவும், சிங்களர்,தமிழர் இன கலப்பு மூலம் புதிய இனம் தோன்றுவதாகவும் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
புலிப்பார்வை திரைப்படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இப்படம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரணத்தை மோசமாக சித்தரித்து காட்டுவதாக உள்ளது. பாலச்சந்திரனை சீன ராணுவத்தினர் கொன்றதாகவும் கூறியுள்ளனர். மேற்கண்ட 2 படங்களும் தமிழர்களை தீவிரவாதிகளாகவும் தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கின்றன.இலங்கை அதிபர் ராஜபட்ச, போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட திரைப்படங்களை தாயாரிப்பதாக கூறப்படுகிறது. எனவே இத்திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்பட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே 2 திரைப்படங்களையும் திரையிட தடைவிதிக்கும்படி டிஜிபி-யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி-க்கு உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருதரப்பு வாதங்களை கேட்டறிந்தார். மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி