இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டது. இதன் மூலம் பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.டெஸ்ட் தோல்வியால் அவரை நீக்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி இருந்தனர். பிளட்சரை நீக்காமல் கிரிக்கெட் வாரியம் ரவி சாஸ்திரியை இயக்குனராக நியமித்து அவரை ஓரங்கட்டியது.
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோரை ஓய்வு என்ற பெயரில் கிரிக்கெட் வாரியம் நீக்கியது.முன்னாள் வீரர்கள் சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோரை உதவி பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதரை பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஒருநாள் தொடர் வருகிற 25ம் தேதி தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி