சென்னை:-‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் சமந்தாவின் கிளாமரான, கவர்ச்சியான நடிப்பு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.படத்தில் பல காட்சிகளில் சூர்யாவுக்கு கிடைக்கும் கைதட்டலை விட, சமந்தா வரும் காட்சிகளில் கைதட்டல்கள் ஒலிக்கிறதாம். இதனால், குடும்பத்துடனும், தங்களது பிள்ளைகளுடனும் சென்று படம் பார்ப்பவர்கள் தியேட்டர்களில் நெளிகிறார்களாம். இது நாள் வரை சூர்யா படங்களுக்கென்று இருந்த மரியாதையை இந்தப் படம் கெடுத்துவிட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
அதிலும் ஒரு பாடல் காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆடிப்பாடுவது கவர்ச்சியின் உச்சமாகவே இருக்கிறது என்றெல்லாம் படத்தைப் பற்றிய கமெண்ட்கள் வருகின்றன. சூர்யா திடீரென இப்படி ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக கிண்டலடித்து கமெண்ட்கள் போடப்பட்டு வருகின்றன. தம்பிக்கு ‘அழகுராஜா’, அண்ணணுக்கு ‘அஞ்சான்’ எனவும், டீஸருக்கு வெற்றி விழா கொண்டாடும் போதே தெரியும், நீங்க பெருசா பல்பு வாங்குவீங்கன்னு என புகைப்படங்களுடனும் பல கமெண்ட்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி