சென்னை:-லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவங்கி ஐதரபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் 80 சதவீத காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது கர்நாடகாவின் ஷிமோகா பகுதிகளில் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று அவ்வப்போது கூறி வந்த த்ரிஷாவிடம், லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுமாறு அழைப்பு வந்ததாகவும், பிஸியாக இருப்பதாக கூறி அதனை ஏற்க திரிஷா மறுத்துவிட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் உலாவின. இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள த்ரிஷா, லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுமாறு யாரும் என்னை கேட்கவும் இல்லை, நான் மறுக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி