சென்னை:-வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு, சூரி இருவரும் மீண்டும் ஜீவா படத்தில் இணைந்துள்ளனர்.ராஜாராணி, குக்கூ ஆகிய படங்களை தயாரித்த ஆடிட்டர் சண்முகத்தின் நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்யாவின் த ஷோ பீப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.
ஜீவா படத்தில் விஷ்ணுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.ஜீவா படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.வெண்ணிலா கபடிக் குழு படத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து கதை சொன்ன சுசீந்திரன் ஜீவா படத்தில் தேசிய அளவிலான ஒரு கருத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறாராம்.இந்தப் படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்கிறார்.டி.இமான் இசை அமைக்கிறார்.
விஷ்ணுவுக்கு மார்க்கெட் இல்லாததினால் ஜீவா படம் பிசினஸ் ஆகவில்லை.எனவே நொந்து போயிருக்கும் தயாரிப்பு தரப்பு, அடுத்த மாதம் வரை காத்திருப்பது, இல்லை என்றால் தாங்களே தியேட்டர்களை எடுத்து ஜீவா படத்தை வெளியிடுவது என்று திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி