மும்பை:-தமிழில் ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இந்திய தயாரிப்பான ரா ஒன் படத்தில் நடித்து ரஜினியை கவுரவித்த ஷாருக்கான், தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் பாடலிலும் ரஜினிக்கு மரியாதை செலுத்தி உள்ளார். இதே போன்ற தமிழ்-இந்தி மொழிகளின் கலப்பில் என் பேரு ரஜினிகாந்த் என்ற பாடல் மூலமும் அவரை கவுரவித்துள்ளார்.
இப்போது ஷாருக்கானை தொடர்ந்து அக்ஷய்குமாரும் தான் நடிக்கும் என்டர்டைமென்ட் படத்தில் பஞ்ச் டைலாக் மூலம் ரஜினியை கவுரவித்துள்ளார். தமன்னா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் வரும் ஒரு வசனத்தில், ரஜினிகாந்தான எனக்கு தெரியும் முடியாத என்பது கிடையாது என்று. இப்போது எல்லோரும் தெரிந்து கொண்டுள்ளனர் முடியாத என்ற வார்த்தையே ரஜினியின் அகராதியில் இல்லை என்று.
ரஜினியின் மனதில் இடம்பிடிக்க இதுவும் நல்ல வழியாக தெரிகிறது என தற்போது பாலிவுட்டில் பலரும் ரஜினியை கவுரவிக்கும் வழிகளை யோசிக்க துவங்கி விட்டனராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி