இது குறித்து தீபா சன்னிதியிடம் கேட்ட போது வழக்கமாக எல்லா நடிகைகளும் மறுப்பது போல் மறுத்தார். அவர் கூறியதாவது:–ஆர்யாவும், நானும் ‘யட்சன்’ படத்தில் நடிக்கிறோம். அவருடன் நான்கு ஐந்து நாட்கள்தான் சேர்ந்து நடித்துள்ளேன். அதற்குள் காதல் என்று வதந்தி பரப்பி உள்ளனர். இதை கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. நான் தற்போது பெங்களூரில் இருக்கிறேன்.
‘யட்சன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கிறது. அப்போது மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்காக வருவேன். சித்தார்த்துடனும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். தமிழை புரிந்து கொள்கிறேன். ஆனால் பேசுவதில் கஷ்டம் உள்ளது. விரைவில் தமிழ் வசனம் பேச கற்றுக் கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி