முதலில் ஆடிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி 148 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்து இருந்தது.இந்நிலையில் 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 486 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான ஜோ ரூட் அபாரமாக விளையாடி 149 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டூவர்ட் ப்ராட் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியை விட 338 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியமால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆவுட் ஆக 94 ரன்களில் சுருண்டது இந்தியா. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய வீரர்களில் அதிகபட்சமாக பின்னி 25 ரன்களும், கோலி 20 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகர்களாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி