சென்னை:-சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர்.
பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் சுருதிஹாசன். தற்போது விஜய் ‘கத்தி’ படத்தில் பிசியாக இருப்பதால் அதற்குள் மகேஷ் பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்துவிட்டு விஜய்யுடன் ஜோடி சேர முடிவுசெய்துள்ளார். இதற்காக ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி செப்டம்பர் மாதத்திற்குள் இப்படத்தை முடிக்கவுள்ளனர்.மகேஷ்பாபுவுடன் சுருதிஹாசன் ஜோடி சேருவது இதுவே முதல் முறை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி