பின்னர் ஒருநாள் இருவரும் ஓட்டலில் சந்திக்கிறார்கள். அப்போது எழில் சிநேகாவிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்கிறார். இதற்கு சிநேகா, உங்களை முன்பே பார்த்திருந்தால் காதலித்திருப்பேன். தற்போது காலம் கடந்து விட்டது என்று கூறுகிறார். அதன்பிறகு சிநேகா எழிலிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாகவும் தன்னை அழைத்துச் செல்லும்படியும் கூறுகிறார். இதற்கு சம்மதம் தெரிவித்த எழில் சிநேகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு சிநேகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். அதன்பிறகு சிநேகா கொடைக்கானலுக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி உதவி கேட்கிறார். இருவரும் செல்லும் வழியில் சிநேகா தன் காதல் அனுபவத்தை கூறுகிறார்.
கல்லூரிப் பருவத்தில் சந்தோஷ் என்பவரை காதலித்தேன். பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். அதன்பிறகு உதவி இயக்குனரான பாண்டியனை பேட்டி எடுக்கும் போது அவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் காதல் ஏற்பட்டது. பின்பு இவருடைய கதையை மற்றொரு இயக்குனர் திருடிவிட்டதால் மனவேதனை அடைந்து எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பின்னர் கொடைக்கானலில் ஒரு செய்தி சம்மந்தமாக சென்ற போது இளவரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது அவரைத் தேடித் தான் நாம் கொடைக்கானல் செல்கிறோம் என்று நீட்டி முழக்குகிறார் சிநேகா.இறுதியில் இளவரசுவை கண்டுபிடித்தார்களா? அல்லது சிநேகா-எழில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.படத்தில் சிநேகா கதாபாத்திரத்தில் அத்வைதா சிறப்பாக நடித்திருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.
சிறப்பாக வசனங்களை பேசி துணிச்சலாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் கதாநாயகர்களாக வரும் உதய்குமார், ஆதிப்ஜெய், திலக், ரத்தினகுமார் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அவருடைய வசன உச்சரிப்பால் மனதை கவர்கிறார்.நெல்லை பாரதியின் பாடல் வரிகளுக்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் பிரபாகர். ஆனந்த் ஒளிப்பதிவில் காட்சிகளை ரசிக்கலாம். நான்கு நாயகன்கள் ஒரு நாயகி என்று கதாபாத்திரங்களை அமைத்து கதையை நகர்த்தியுள்ள இயக்குனர் முத்துராமலிங்கன் பொழுதுபோக்குடன் காமெடி நடிகர்களை சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘சிநேகாவின் காதலர்கள்’ காதல்…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி