இத்தனை சிறப்புகள் வாய்ந்த சீனப் பெருஞ்சுவரை ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டு பயணிகள் கண்டு களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், மிங் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1368-1644) கட்டப்பட்ட இந்த சுவற்றின் ஒரு பகுதியில் சுமார் 90 சதவீதம் சிதிலமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.புயல், மழை, வெள்ளம், பூகம்பம் ஆகிய இயற்கை சீற்றங்களை தாக்குப் பிடித்து கம்பீரமாக நின்ற இப்பகுதியில் உள்ள சுவற்றின் கற்களை பலர் பெயர்த்தெடுத்து சென்று விட்டதாகவும், சுவற்றையொட்டியுள்ள பகுதிகளில் பலர் மரம், செடி, கொடிகளை வளர்த்து வருவதாகவும் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் அமைப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனப் பெருஞ்சுவரை பார்க்க வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியிடமும் 17 அமெரிக்க டாலர்களை கட்டணமாக வாங்கும் அரசாங்கம் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கலைப் பொக்கிஷத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி