அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…

விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…

விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!… post thumbnail image
பிரேசில்:-பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் சிறிய விமானம் மூலம் ஆதரவாளர்களுடன் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேம்போசு, விமானி உள்பட அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகினர்.விமானம் சாண்டோஸ் நகரில் விபத்தில் சிக்கியுள்ளது. கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதனால் தரையிறங்க முயன்ற விமான தரையிறக்கப்படவில்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் அப்பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்துள்ளது. இதில் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. விமானம் விழுந்த பகுதியில் நின்ற 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உயிருக்கு எந்த அச்சமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி