செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ஜிகர்தண்டா திரைப்படத்தை பாராட்டிய இளைய தளபதி…!

ஜிகர்தண்டா திரைப்படத்தை பாராட்டிய இளைய தளபதி…!

ஜிகர்தண்டா திரைப்படத்தை பாராட்டிய இளைய தளபதி…! post thumbnail image
சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். மேலும் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவை செய்திருந்தார்.

ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த இப்படத்தை கார்த்திக் சுபாராஜ் இயக்கியிருந்தார். படம் வெளியான நாட்களில் இருந்து படம் பற்றிய நல்ல கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினரும் இப்படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தற்போது இப்படத்தைப் பார்த்த விஜய், இயக்குனர் கார்த்திக் சுபாராஜுக்கு தனிப்பட்ட முறையில் தன் பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசித்ததாக கூறியுள்ளார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தை இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி