இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதையொட்டி இந்தியாவில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் பி.அசோக் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இதை பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.1.89 முதல் ரூ.2.38 வரை குறைகிறது.
டெல்லியில் ரூ.2.18 குறைகிறது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.இந்த புதிய விலைப்படி சென்னையில் லிட்டருக்கு ரூ.2.31 குறைகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.47–க்கு விற்பனையாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி